
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிளாவியோ கோபோலி (இத்தாலி), மரின் சிலிக் (குரோஷியா) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை பிளாவியோ கோபோலி கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை சிலிக் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 4-வது செட்டை கோபோலி கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டத்தில் கோபோலி 6-4, 6-4 மற்றும் 6-7 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.