விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற சினெர்...!

7 hours ago 3

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முன்னணி வீரர்களான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதனர். 3 மணிநேரம் 4 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 4-6,6-4,6-4,6-4 என்ற நேர் செட்களில் கார்லசை வீழ்த்தி சினெர் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் முதன்முதலாக சினெர் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

Read Entire Article