லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் 6-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். இங்கிலாந்தின் கேமரூன் நோரி, அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோரும் 4வது சுற்றில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-2, 5-7, 6-4 என செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். பெலாரசின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் அனஸ்தேசியா ஆகியோரும் 4வது சுற்றில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
The post விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ் கால்இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.