லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி போட்டியில், நடப்பு சாம்பியனும் 2ம் ரேங்க் வீரருமான ஸ்பெயினின் 22 வயதான கார்லோஸ் அல்காரஸ், இங்கிலாந்தின் 29 வயதான கேமரூன் நோரியுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2,6-3,6-3 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால்இறுதியில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலஇறுதியில், அமெரிக்காவின் 23 வயதான அமண்டா அனிசிமோவா 6-1,7-6 என ரஷ்யாவின் அனஸ்தேசியா வை வீழ்த்தினார். அரையிறுதியில் நம்பர் 1 சபலென்காவுடன் நாளை அமண்டா மோத உள்ளார். இன்று மாலை 6.40 மணிக்கு ஆடவர் ஒற்றையர் கால்இறுதியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன், 7.10 மணிக்கு செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியின் ஃபிளேவியோ கோபோலி, மகளிர் ஒற்றையரில் மாலை 5.30 மணிக்கு போலந்தின் ஸ்வியாடெக், ரஷ்யாவின் லியுட்மிலா, 6 மணிக்கு ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதுகின்றனர்.
The post விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு அல்காரஸ் தகுதி appeared first on Dinakaran.