சென்னை: மங்களூர்- சென்னை இண்டிகோ விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணை போட்டோ எடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் நள்ளிரவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண்ணை ரகசியமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்தவரை சக பயணிகள் தாக்க முயன்றனர்; சென்னை விமான நிலைய போலீசில் பயணி ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா (45) என தெரிய வந்தது.
The post விமானத்தில் பெண்ணை போட்டோ எடுத்தவர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.