
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் டெல்லிக்கு இண்டிகோ விமானம் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானத்தில் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டன.
விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது அப்போது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது பயணி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முகமது அலி தெரிய வந்தது. இதுகுறித்து ஊழியர்கள் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். விமான சட்டத்தின் 125 வது பிரிவின் கீழ் முகமது அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரே மாதத்தில் 2-வது வழக்கு என விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.'