நாக்பூர்: நாடு முழுவதும் உள்ள விமானங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த மாதம் 14ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை 300 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நாக்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டம், அர்ஜூனி மோர்கான் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் ஸ்ரீராம் உய்கே(35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நாக்பூர் போலீசார் ஜெகதீஷ்க்கு சம்மன் அனுப்பினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நாக்பூருக்கு விமானம் மூலம் வந்த ஜெகதீஷ் உய்கே போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘ 11ம் வகுப்பு வரை படித்துள்ள ஜெகதீஷ் உய்கே தீவிரவாதம் தொடர்பாக புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றனர்.
The post விமானங்களுக்கு குண்டு மிரட்டல் மகாராஷ்டிரா வாலிபர் போலீசில் சரண் appeared first on Dinakaran.