விமான சாகசம் பாராட்டுக்குரியது; உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானது - ப.சிதம்பரம்

3 months ago 23

சிவகங்கை,

சிவகங்கையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்தவர்களின் இழப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது, விமானப்படையின் சாகசம் பாராட்டுக்குரியது. உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கும் என நம்புகிறேன். உயிரிழந்தவர்கள் கூட்ட நெரிசலில் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம், சில நோய்களால் இறந்ததுபோல் தெரிகிறது.

கருத்துக்கணிப்புகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை, அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். இஸ்ரேல் - ஈரான் போர் நிற்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றை கட்சி வேறுபாடின்றி, ஏற்றுக் கொள்கிறோம்.

போர் நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொள்கிறார், அதனை அனைத்து கட்சிகளும் ஆதரிக்கின்றனர். இஸ்ரேல் - ஈரான் போர் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். போர் தொடர்ந்தால் எண்ணெய் விலை அதிகரிக்கும் ஆனால் அதிக இடங்களில் எண்ணெய் உற்பத்தி இருப்பதால் கடுமையான விலை உயர்வு இருக்காது.

சட்டப்பிரிவு 370-ஐ பற்றி தேர்தல் அறிக்கையில் கூறவில்லை, மாநில அந்தஸ்து என்பதே முதல் இலக்கு. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தர வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது, அதை நிறைவேற்றுவதே எங்கள் இலக்கு. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது, அடுத்த தேர்தலிலும் வெற்றிபெரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article