விமல் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

3 days ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் 'சார் என்ற' திரைபடமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தனது 34-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை 'தமிழ்க்குடிமகன்' என்ற திரைப்படத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்ற இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கதாநாயகியாக சாயாதேவி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த படம் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசும் வகையில் உருவாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்திற்கு 'பரமசிவன் பாத்திமா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Happy to reveal the Title Look of #Vemal34 as #ParamasivanFathima! Best wishes to the team for Big Success!! Produced & Directed by @LCMOVIES_2006 @directoresakki#ParamasivanFathimaTitleLook @ActorVemal #Chayadevi #VimalRaj @seshvitha_raju #MSBhaskar #CoolSuresh #SriRanjanipic.twitter.com/KHriyNbKjQ

— VijaySethupathi (@VijaySethuOffl) November 30, 2024
Read Entire Article