விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்: உதயநிதி ஸ்டாலின்

3 months ago 28

சென்னை,

தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். இன்று துணை முதல் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுபேற்க உள்ள நிலையில், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

துணை முதல்வர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்.மக்களுக்காக உழைக்க இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். முதல் அமைச்சர், மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article