
புதுடெல்லி,
டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானார்கள். இதையடுத்து அங்கு கூட்டத்தை சமாளிக்க கூடுதலாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இருப்பினும் நேற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அவர்களில் பலர் பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு செல்பவர்கள். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனாலும் மக்கள் கூட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது என்றனர்.நிலைமையை சமாளிப்பது கடினமாக உள்ளது. ரெயிலின் கொள்ளளவைவிட, அதிகமான பயணிகள் ரெயில்களில் பயணிக்கிறார்கள். படிகட்டுகள், ஜன்னல்களில் தொற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள் என்று கூறினர்.