விபத்தில் இறந்தவராக கருதப்பட்டவர் கூலிப்படையால் கொல்லப்பட்டது அம்பலம் - மனைவி, மகள் கைது செய்த போலீசார்.

2 months ago 10
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாலையோரம் சடலமாக கிடந்தவர், சாலை விபத்தில் இறந்தததாக கருதப்பட்ட நிலையில், கூலிப்படையால் அடித்துக் கொல்லப்பட்டது அம்பலமானதால் அவரது மனைவி-மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விபத்து நடந்ததற்கான தடயம் எதுவும் இல்லாததால் சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. படதாசம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் மது போதையில் தகராறு செய்து வந்ததால், அவரது கை,கால்களை உடைக்கும்படி அவரது மனைவி மாதேஸ்வரி கூலிப்படைக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அவர்கள் கொலை செய்வார்கள் என்று தாம் நினைக்கவில்லை என்று போலீஸ் விசாரணையில், மாதேஸ்வரி தெரிவித்துள்ளார். கூலிப்படையினர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியபோது கோவிந்தசாமியின் தலையில் அடிபட்டதால் எதிர்பாராதவிதமாக கோவிந்தசாமி இறந்ததாக மாதேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார். 
Read Entire Article