விபத்தால் ஜனவரியில் முடக்கம் துருவ் ஹெலிகாப்டரை மீண்டும் பயன்படுத்த அனுமதி

2 weeks ago 5

புதுடெல்லி: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் துருவ் இரட்டை இன்ஜினுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. ஹெச்சிஎல் நிறுவனம் தயாரித்த 340க்கும் மேற்பட்ட துருவ் ஹெலிகாப்டர்கள் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையில் சேவையில் இருந்தது. கடந்த ஜனவரி 5ம் தேதி குஜராத்தின் போர்பந்தர் விமான நிலைய ஓடுபாதையில் கடலோர காவல் படையின் துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 2 விமானிகள் 3 வீரர்கள் பலியாகினர்.

இந்த விபத்தை தொடர்ந்து, துருவ் ஹெலிகாப்டரின் சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் துருவ் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ராணுவம், விமானப்படையில் துருவ் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

 

The post விபத்தால் ஜனவரியில் முடக்கம் துருவ் ஹெலிகாப்டரை மீண்டும் பயன்படுத்த அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article