
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'ரூஹி', 'குட் லக் ஜெர்ரி', 'மிலி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்ததாக ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் 'பெத்தி' திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை ஜான்வி கபூர் சென்று இருக்கிறார். அந்த விழாவில் நடிகை ஜான்வி கபூர் வித்தியாசமான உடை அணிந்து ("பேக்லெஸ்" உடை) கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.