விதிமீறிய வாகனங்களுக்கு ₹5.8 லட்சம் அபராதம்

15 hours ago 3

ஆலந்தூர், ஜன. 9: மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், அதிக வேகம், அதிக பாரம், செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டுவது, மது அருந்தி விட்டும், ஷீட் பெல்ட்’ அணியாமலும் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட விதிமுறை மீறிய 86 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அந்த வாகன உரிமையாளர்களிடம் இருந்து ₹5.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

The post விதிமீறிய வாகனங்களுக்கு ₹5.8 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article