விதிமீறி பட்டாசு தயாரித்தவர் கைது

6 months ago 32

 

ஏழாயிரம்பண்ணை, அக்.11: தாயில்பட்டி, வெம்பக்கோட்டை சுப்பிரமணியாபுரம், விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டி தெற்கு தெருவில் உள்ள பார்த்திபன்(26) என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே உள்ள தகர செட்டில் பட்டாசு தயாரிப்பதாக ஏழாயிரம் பண்ணை காவல் சார்பு ஆய்வாளர் ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு எந்தவிதமான அரசு அனுமதியும் இல்லாமல் சுமார் ரூ.5000 மதிப்புள்ள திரி பொருத்தப்பட்டுள்ள வாணவேடிக்கையின் குழாய்கள் இருந்தது தெரியவந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் பார்த்திபனை கைது செய்தனர்.

The post விதிமீறி பட்டாசு தயாரித்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article