காரியாபட்டி, மார்ச் 13: ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு காக்கி சீருடை, பெயர் அட்டை, ஆட்டோ நம்பர், நிர்ணயிக்கிப்பட்ட பயணிகளை ஏற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் பெரும்பாலான ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஒரு சில ஆட்டோக்களில் 18 வயதிற்கு உட்பட்ட லைசன்ஸ் இல்லாத ஓட்டுநர்கள் அதிவேகத்தில் கண்மூடித்தனமாக ஆட்டோவை ஓட்டி தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆகையால் விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள் appeared first on Dinakaran.