கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓய்வுபெற்ற கூடுதல் டி.எஸ்.பி. பெருமாள்சாமி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தவர் பெருமாள்சாமி. கடந்த 2 நாட்களுக்கு முன் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் ஆஜரான நிலையில், இன்று பெருமாள்சாமி ஆஜராகியுள்ளார். மற்றொரு பாதுகாப்பு அதிகாரியான ராஜாவிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன் விசாரணை நடைபெற்றது. கோடநாடு வழக்கில் இதுவரை 250 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
The post கோடநாடு வழக்கு -ஓய்வுபெற்ற கூடுதல் டி.எஸ்.பி. ஆஜர் appeared first on Dinakaran.