வாஷிங்டன்,
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களுக்கு மேல் தங்கி உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர். விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோ பதிவு ஒன்றை நாசாவெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், பூமியில் உள்ள அனைவருக்கும், சர்வதேச விண்வெளி வீரர்களான எங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரவேற்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் 7 பேர் இங்கே இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளோம் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.