விண்ணைத் தொடும் விமான கட்டணம் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

1 month ago 3


புதுடெல்லி: விமான கட்டணங்கள் விண்ணை தொடுகின்றன. இந்த கட்டண உயர்வை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:

* கடந்த ஒரு ஆண்டில் விமானப் பயணக் கட்டணங்களில் அதிகமான ஏற்றத்தாழ்வு காணப்படுவது உண்மையா? குறிப்பாக, 40% விலை அதிகரித்திருப்பது உண்மையா? அப்படியென்றால் கட்டணத்தை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

* விமானப் பயணத்திற்கான அதிகத் தேவை ஏற்படும் காலங்களில், செக்டர் வாரியாக விமானப் பயணக் கட்டணத்திற்கென ஒரு சராசரி உச்சவரம்பை நிர்ணயிப்பதற்கான திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா?

* விமானப் போக்குவரத்துத்துறை நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் இதுதொடர்பாக ஏதேனும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதா?

* தற்போது, விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை நிர்ணயிப்பதில், பின்பற்றப்படும் அளவுகோல்கள் என்ன?

* விமான நிறுவனங்கள் தன்னிச்சையாக பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

* விமான நிறுவனங்களுக்கிடையே நியாயமான போட்டியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு ஏதேனும் திட்டங்களை முன்மொழிகிறதா? அல்லது விமானப் பயணிகள் குறைந்த விலையில் பயணத்தை மேற்கொள்ள அரசு சார்ந்த நிறுவனங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

The post விண்ணைத் தொடும் விமான கட்டணம் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article