திருச்சி, பிப்.8: திருச்சி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி ஒய்.எம். சி.ஏ. விளையாட்டு அகாடமியால் நடத்தப்பட்டது. இதில் 8 பள்ளி அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி, பாய்லர் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை 63-59 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியை 14-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் சுகந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த பள்ளி அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருச்சி கேர் சர்வதேச பள்ளி முதல்வர் ப்ரீத்தி ஆராவமுதன், திருச்சி மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர் ரான்சன் தாமஸ் ஞானராஜ், செயலாளர் கண்ணன், ஒய்.எம்.சி.ஏ. தலைவர் ஜான் ராஜசேகரன், செயலாளர் நோபிள் ரிச்செர்ட், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலையில் பரிசுகளை வழங்கினார்.
The post திருச்சி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான ஆண்கள் கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.