விண்ணில் செலுத்தப்பட்டது ஃபால்கன்-9 ராக்கெட்.. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை அழைத்துவர நாஸா நடவடிக்கை

7 months ago 54
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்துடன் ஃபால்கன்-9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கெனாவரல் ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை இந்த ராக்கெட் ஏவப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை அழைத்துவருவதற்காக நான்கு இருக்கைகள் கொண்ட விண்கலத்தில் இரு இருக்கைகளை காலியாக வைத்து நிக் ஹாக்வே, அலெக்சாண்டர் கோர்பனோவ் ஆகிய இரு விண்வெளி வீரர்களுடன் விண்கலம் செலுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான்கு பேரும் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது. 
Read Entire Article