திருவண்ணாமலை, பிப்.17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களை போல, வார இறுதி விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதியது. மேலும், வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது
The post விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.