
கன்னியாகுமரி.
குமரிக் குற்றாலம்' என்று திற்பரப்பு அருவி அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவியைக்காண பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் தண்ணீர் விழும் நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் ஆனந்தக்குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.
தற்போது அருவிக்கு தண்ணீர் சீராக வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், விடுமுறை தினத்தை முன்னிட்டு திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தந்தனர். அவர்கள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி சென்றும், செல்பி படம் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.