விடுதி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்

4 months ago 27

தர்மபுரி, அக்.5: தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதி பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் முத்து தலைமையில் நடந்தது. கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதேஸ், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, துணை செயலாளர் சுதர்சனன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், பள்ளிக்கல்வி தூய்மை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள் முனிராஜ், அனிதா, பழனியம்மாள், பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விடுதியில் பணிபுரியும் சமையலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுதியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விடுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

The post விடுதி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article