
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரைப் பதிக்கும் அளவுக்கு பங்காற்றிய வீரப் பெண்மணி கடலூர் அஞ்சலையம்மாளின் 64-ஆம் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்குகிறேன்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைக் கண்டு அனைவரும் அஞ்சிய நிலையில், வெள்ளையர்களையே மிரள வைத்தவர் அஞ்சலையம்மாள். கொடியவன் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.