'விடி12' படம் : தமிழ் டப்பிங் பணியில் சூர்யா

10 hours ago 3

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக 'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி12' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசருக்கு குரல் கொடுக்கும் தமிழ் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் நடிகர் சூர்யா. மேலும் இந்தி மொழிக்கு ரன்பீர் கபூர், தெலுங்கு மொழிக்கு ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் குரல் கொடுத்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

For the tale of a KING destined to claim his throne comes a mighty addition ❤️❤️The supremo @Suriya_offl lends his voice to the #VD12 Tamil Teaser! Get ready for Feb 12th!! @TheDeverakonda @anirudhofficial @gowtam19 @dopjomon #GirishGangadharan @vamsi84 #SaiSoujanyapic.twitter.com/qAL8bpXquc

— Sithara Entertainments (@SitharaEnts) February 10, 2025
Read Entire Article