'விடாமுயற்சி' படத்தின் டீசர் அப்டேட்

2 months ago 14

சென்னை,

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வெளியானது. இதையடுத்து அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தில் நடித்த அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா உள்ளிட்ட நடிகர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் ரசிகர்களும் அஜித்தின் அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் டப்பிங் பணிகள் நேற்று துவங்கியுள்ளன. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசர் வருகிற நவம்பர் 10 ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

Read Entire Article