சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது. விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான சவதீகா மற்றும் பத்திக்கிச்சி ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது இப்படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது 'விடாமுயற்சி' திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.