விஜய்யை வைத்து படம் இயக்க மறுத்த பி. வாசு

3 months ago 22

சென்னை,

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக உள்ளவர் பி.வாசு. இவர் 'சின்னதம்பி', 'பணக்காரன்', 'சந்திரமுகி', 'சிவலிங்கா' மற்றும் பல படங்களை இயக்கி உள்ளார். இவ்வாறு பிரபல இயக்குனராக இருக்கும் பி.வாசு, தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து படம் இயக்க மறுத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் விஜய்யின் முதல் படத்தை இயக்க முடிவு செய்வதற்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை அறிமுகப்படுத்த பல பிரபல இயக்குனர்களை அணுகி இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் அணுகிய அந்த இயக்குனர்களில் பி.வாசுவும் ஒருவர், ஆனால் சில காரணங்களால் பி.வாசு அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

நடிகர் விஜய் தற்போது தனது 68-வது படமான 'தி கோட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து தனது 69-வது படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார். இப்படம்தான் விஜய்யின் கடைசி படமாகும். அதன்பிறகு விஜய் அரசியலில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article