சென்னை,
திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாட்டிற்கு தேவை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்போதுதான் களம் சூடுபிடித்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அவர் களத்தில் இறங்கி விளையாடட்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் பெரிய கட்சிகள்தான், அனுபவம் வாய்ந்த கட்சிகள்தான். 2026 தேர்தல் என்பது கூட்டணியின் உண்மையான பலத்தை புரியவைக்கும் தேர்தலாக இருக்கும். இதுவரை பார்த்த தேர்தல்களை விட 2026 தேர்தல் மிகவும் வித்தியாசமாக இருக்கும்."
இவ்வாறு ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.