புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ் தேசிய கட்சிகள் என்று தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் இயங்குகிறது. எங்களுக்குள்ளாக பகைமுரணை நாங்கள் உருவாக்கிக் கொள்ள விரும்பாமல், அவர் என்னைக் குறித்து விமர்சிக்காமல் கடந்து போகிறார். நான் அவரைக் குறித்து விமர்சிக்காமல் கடந்து போகிறேன். இது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கட்டும் என நான் விரும்புகிறேன்.
அதனால் அவர் குறித்து எந்த விமர்சனத்தையும் நான் முன் வைக்கவில்லை. அதே வேளையில் பெரியார் குறித்த சீமானின் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தவெக தலைவர் விஜய் கேட்காமல், கோரிக்கை வைக்காமல் ஆளுநரை சில நாட்களுக்கு முன்பு அவர் சந்தித்து வந்ததற்கு பிறகு ஒன்றிய அரசு அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது என்றால் அதில் அரசியல் இல்லாமல் இல்லை, அரசியல் இருப்பதாக நான் பார்க்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்ததில் அரசியல் உள்ளது: வேல்முருகன் கருத்து appeared first on Dinakaran.