மும்பை,
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான முதல் 3 ஆட்டத்துக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 17 பேர் கொண்ட இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டில் பிரித்வி ஷா 9 ஆட்டங்களில் ஆடி வெறும் 197 ரன் மட்டுமே எடுத்தார். அத்துடன் அவருக்கு உடல்தகுதி பிரச்சினையும் இருக்கிறது. இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் ரஞ்சி தொடரின் போது உடல்தகுதி மற்றும் ஒழுங்கீன செயலால் அவர் அணியில் இருந்து பாதியில் கழற்றிவிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்தா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், சித்தேஷ் லாட், ஹர்திக் தாமோர், பிரசாத் பவார், அதர்வா அன்கோலேகர், தனுஷ் கோட்டியன், ஷர்துல் தாக்கூர், ராய்ஸ்டன் டியாஸ், ஜூனெட் கான், ஹர்ஷ் டன்னா, வினாயக்.