சென்னை: நடிகர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: விஜய் துவங்கியிருக்கின்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக ஒன்றிய அரசை விமர்சித்து பேசியது விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி வருவாயை வாங்கிக்கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக்கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை. தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிகரமான முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பிரதமர் குறித்து எதிர்மறையாக பேசுவதற்கு முன்பாக புள்ளி விவரங்களை அறிந்து, புரிந்து கொண்டு, ஆராய்ந்து தெளிவாக பேசியிருந்தால், அதுவும் பொதுக்குழுவில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post விஜய் பேச்சு விநோதமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது: சரத்குமார் அறிக்கை appeared first on Dinakaran.