விஜய் பேச்சு எதுகை மோனைக்கு தான் சரியாக இருக்கும்: தமிழிசை பேட்டி

2 days ago 4

சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ”பாஜக இரண்டாவது மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ளது என ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2026 உங்கள் கூட்டணி கட்சிகள் இரண்டு மூன்றாக பிரிந்து விடும் போலிருக்கிறது. விஜய் ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் திமுகவிற்கும் தவெகவிற்கும்தான் போட்டி என எதுகை மோனையில் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரிலேயே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவும் சரி, எம்ஜிஆரும் சரி கட்சியில் அடிப்படையில் மக்களுக்காக தீவிரமாக பணியாற்றி தான் முன்னால் வந்தார்கள். ஆனால் விஜய் அவராகவே இமேஜின் செய்து கொண்டு பேசுகிறார். கொள்கைக்கு காங்கிரஸ் கொள்ளைக்கு இன்னொரு கட்சி என சொல்லுகிறார். தம்பி விஜய் அவர்களே நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான எதிர்ப்பை தீவிரப்படுத்துங்கள். சினிமாவில் ஒரு பாட்டு சீன் வச்சுக்கலாம்; ஒரு சண்டை சீன் வச்சுக்கலாம்; ஒரு எதிர்ப்பு சீன் வச்சுக்கலாம் என்பதைப் போல் இருமொழி கொள்கையைப் பற்றி கொஞ்சம் பேசுவோம். இதைப் பற்றி கொஞ்சம் அதைப்பற்றி கொஞ்சம் பேசலாம் என நினைக்கக் கூடாது.

அந்த காலத்தில் உள்ள நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளே இருந்தது. ஆனால் இன்று உங்களுடைய படமே தெலுங்கானாவில் ஓஹோ என ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது விரிவுபடுத்தப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் பொழுது, இதேபோல விரிவுபடுத்தப்பட்ட சவால்களில் குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் படத்திற்கு பல மொழி வேண்டும் பாடத்திற்கு பல மொழி வேண்டாம் என சொன்னால் எப்படி? திமுக இருமொழிக் கொள்கை சொல்கிறது, நாமும் இருமுடி கொள்கையை செல்வோம். வக்பு சட்டத் திருத்தத்துக்கு திமுக எதிர்ப்பு சொல்கிறார்களா நாமும் எதிர்ப்பு சொல்லி விடுவோம். பல நகராட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சாயத்துகளை கீழே தள்ளிவிட்டு சாமானிய மக்கள் சின்னம் இல்லாமல் போட்டி போடுவதை தடுத்துவிட்டு ஒரு கட்சி சார்ந்த நகராட்சி அமைப்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய டிலிமிடேஷனை என்ன சொல்வது. திமுகவிற்கும் உங்களுக்கும் என்ன மாறுபாடு? புதிதாக எதுவுமே சொல்லவில்லை. எல்லோருமே நேற்று டெல்லி போனார்கள். நான் போனால் அதற்கும் ஒரு கதை கட்டுவீர்கள். அதற்காகவே நான் டெல்லி போகவில்லை” என்றார்.

 

The post விஜய் பேச்சு எதுகை மோனைக்கு தான் சரியாக இருக்கும்: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article