மதுரை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு அக். 19ம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த ராஜமுருகன் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லியோ பட குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விளம்பர நோக்கோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். படக்குழு தரப்பின் வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர்.