திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஊதியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக சிவக்குமார் (வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் ஆசிரியர் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் ஆசிரியர் சிவக்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.