விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் தேசிய விருது பெற்ற நடிகை?

3 days ago 2

சென்னை,

விஜய் தேவரகொண்டா தற்போது 'கிங்டம்' என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். மே மாதம் வெளியாக உள்ள இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. கிங்டம் படத்தை தவிர விஜய் தேவரகொண்டா, ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கிரித்யன் ஆகியோரின் படங்களிலும் நடிக்க உள்ளார்.

இதில், ரவி கிரண் கோலாவுடன் இயக்கும் படத்திற்கு 'ரவுடி ஜனார்தன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்திய தகவலின் படி, இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் கதையை கேட்டவுடன் ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரிகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோடையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article