புழல் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்-ஒருவருக்கு பல் உடைந்தது

1 day ago 5

சென்னை,

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னை திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ரிஷி குமார், செபஸ்டின் டேனியல், வீரா, கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியில் கஞ்சா விற்கும் போது இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் சிறையில் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கஞ்சா வழக்கில் கைதான 2 கோஷ்டி கைதிகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.இதில் ரிஷிகுமார் தாக்கியதில் வீராவின் பல் உடைந்து ரத்தம் கொட்டியது.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த கோஷ்டி மோதல் குறித்த புகாரின்பேரில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். புழல் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article