விஜய் சரியான இலக்கை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்: ஓபிஎஸ் கருத்து

4 hours ago 2

சென்னை: பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா தங்களை அழைக்காதது வருத்தம்தான் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு'வின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம், கடந்த 2 நாட்களாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட நிர்வாகிகளுடனும், மாவட்ட வாரியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

Read Entire Article