விஜய் இதே வீரியத்துடன் இருக்க வேண்டும் - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

2 months ago 12

 

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் உரை குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது,

தம்பி விஜய்க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கட்சி ஒன்று உருவாகியுள்ளது. உதயாவுக்கு எதிராக உருவாகியுள்ள அந்த கட்சிக்கு எனது வாழ்த்துகள். விஜய் இதே வீரியத்துடன் இருக்க வேண்டும். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருக்கிறது. குற்றம் சொல்லும் அளவிற்கு எதுவுமே பாஜகவில் இல்லை என்பதை தம்பி விஜய்க்கு விளக்க நான் தயாராக இருக்கிறேன்' என்றார். 

Read Entire Article