நாகர்கோவில்,
நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பெரியார் பல சவால்களை சந்தித்தவர். உலகம் இருக்கும் வரை பெரியாரின் சிந்தனைகளை யாராலும் அழிக்க முடியாது. தற்போது மாணவ, மாணவிகள் பெரியாரின் சிந்தனைகள் குறித்த புத்தகத்தை வாங்கி படித்து அதன் வழி நடக்கின்றனர்.
பெரியார் காலத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான கொள்கைகள் எடுக்கப்பட்டது என்றால், நம் முன்னோர்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் தான் அந்த கொள்கைகளை பெரியார் எடுத்துள்ளார். தமிழக கவர்னர் தனக்குரிய கடமைகளை செய்யவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கவர்னர் நடக்கவில்லை. இதைத் தான் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக முதல்-அமைச்சரும் அதை பற்றித் தான் பேசி வருகிறார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என கவர்னர் இப்போதாவது வாய் திறந்து உண்மையை சொன்னதற்கு நன்றி. இந்த கருத்து மூலம் தன்னை மாற்றுவதற்கு அவர் முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.