விஜய் அரசியலில் சாதிக்க நினைக்கிறார், அவருக்கு ஆதரவாக இருப்போம் - நடிகர் நரேன்

4 months ago 11

சென்னை,

தமிழில் சித்திரம் பேசுதடி, நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நரேன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, விக்ரம் போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக விஜய் நடிக்கும் கடைசி படம் தளபதி 69. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு வீச்சில் இறங்குகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி வரும் 2026 தேர்தலில் போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் 'தளபதி 69'ல் நடித்து வரும் நரேன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, 'தளபதி 69' படம் நன்றாக செல்கிறது. விஜய் தமிழ் சினிமாவை விட்டு செல்வது கஷ்டமாக உள்ளது. விஜய் அரசியலில் சாதிக்க நினைக்கிறார். அவருக்கு ஆதரவாக இருப்போம்' என்றார்.

Read Entire Article