விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

3 weeks ago 5

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் சங்கு வளையல், காதணி, மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு இதுவரை, உடைந்த சுடுமண் உருவப்பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், தங்க நாணயம் உள்ளிட்ட 2,400க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 10 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் 10வது குழியில் நடந்த அகழாய்வில் சுடுமண் சங்கு வளையல், மணி, காதணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘இங்கு நம் முன்னோர் பல தொழில்களில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றன. தற்போது சங்கு வளையல் கிடைத்ததன் மூலம், அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அலங்காரத்தில் ஆர்வம் காட்டியதற்கு சான்றாக சுடுமண் மணி, அலங்கரிக்கப்பட்ட காதணி ஆகியவை கிடைத்துள்ளன’ என்றார்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article