சிவகங்கை,பிப்.20: சிவகங்கை அரண்மனைவாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலப்பிடாவூர் கிராமத்தில் மாணவரின் கையை வெட்டிய சம்பவத்தை கண்டித்தும், சிவகங்கை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் பாலையா தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் கனியமுதன், துணை செயலாளர் செல்லப்பாண்டியன், மண்டல துணை செயலாளர் முத்துராசு, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆதிவளவன் வடக்கு மாவட்ட செயலாளர் இளையகௌதமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் மாவட்ட செயலாளர் திருமொழி, பொறுப்பாளர்கள் பாஸ்கரன், சேட் முகமது, அய்யனார், கணேசன், ஆதி, ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கார்த்திக், கண்ணன், முனியசாமி, ஜேம்ஸ்வளவன், காளிதாஸ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வெற்றிவிஜயன் நன்றி கூறினார்.
The post விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.