விசிக அங்கீகாரம் பெறுவதற்கு இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அளப்பரியது: திருமாவளவன்

2 hours ago 3


சென்னை: விசிக அங்கீகாரம் பெறுவதற்கு இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அளப்பரியது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்; இந்திய தேர்தல் ஆணையம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து ‘பானை’ சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த மகத்தான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தமிழக மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தோழமை கட்சிகளுக்கு குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழக மக்களின் நலன்களுக்காக வாழ்வுரிமைகளுக்காக தொடர்ந்து விசிக போராடும். தமிழ்நாட்டு மக்களின் பேரன்பை பெற்ற ஒரு பேரியக்கமாக விசிக வளரும். விசிக அங்கீகாரம் பெறுவதற்கு இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அளப்பரியது.

முதன் முதலில் 1999இல் விசிக தேர்தலில் போட்டியிடும் போது வன்முறையாளர்களின் தாக்குதலில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், ரத்தம் சிந்தினர். பாதிக்கப்பட்ட எமது தொகுதி வாக்காளர்களுக்கு இந்த வெற்றியை, அங்கீகாரத்தை சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விசிக அங்கீகாரம் பெறுவதற்கு இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அளப்பரியது: திருமாவளவன் appeared first on Dinakaran.

Read Entire Article