விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் மரணம்: முதல்-அமைச்சரிடம் நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி

5 days ago 4

சென்னை,

சிவகங்கையின் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;

"காவல்துறை அமைச்சர்" மு.க.ஸ்டாலினுக்கு 9 கேள்விகள்:

1. அஜித்குமாரை கைது செய்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்தாதது ஏன்?

2. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் பணிபுரியும் ஒருவரை சட்டவிரோதமாக விசாரிக்க யார் அனுமதி அளித்தது?

3. தனிப்படை அமைத்து உடனே விசாரிக்கும்படி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?

4. கடும் தாக்குதலால் மயங்கிய அஜித்குமாரை 4 மணி நேரம் வேனில் பூட்டி வைத்தது ஏன்?

5. உயிர்போன தடயங்களை அழிக்க காவல்துறைக்கு அந்த 4 மணி நேரம் அவகாசம் தேவைப்பட்டதா?

6. சந்தேகத்திற்குரிய மரணம் என்பதால் தான் திருப்புவனம், மானாமதுரை அரசு மருத்துவமனைகள் அஜித்குமாரின் சடலத்தை வாங்க மறுத்துவிட்டனரா?

7. கொலை என்பது உறுதியான பின்பும் அதற்குக் காரணமானவர்கள் மீது இதுவரை கொலை வழக்கு பதியாதது ஏன்?

8. திமுகவினர் மூலம் அஜித்குமார் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தியது எதற்கு? திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித்குமாரின் தம்பியை எங்கேயோ அழைத்து சென்றது ஏன்?

9. காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? இதுவரை நடந்த 24- க்கும் மேற்பட்ட காவல் மரணங்களுக்கு முதல்வர் எப்போது பொறுப்பேற்பார்?

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Read Entire Article