மதுரை: சிலை கடத்தல் வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல். இதே பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா, சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க பொன். மாணிக்கவேல் முயன்றார். இதற்கு இடையூறாக இருந்த என் மீது வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.