
சென்னை,
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், ரீத்து வர்மாஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 7 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் கிடப்பில் போடப்பட்ட திரைப்படமான துருவ நட்சத்திரத்தை ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிருப்பதாக, படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

தனது இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பின்போது, 'துருவ நட்சத்திரம்' படம் குறித்த அறிவிப்பையும் ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்து கொண்டார். 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம், நிதி பிரச்னை உள்பட பல பிரச்னைகளால் நீண்ட காலமாக வெளிவராமல் தள்ளிப்போனது. 2023-ல் நவம்பர் மாதம் 'துருவ நட்சத்திரம்' வெளியிடப்படவிருந்த நிலையில், படம் வெளியிடுவது தள்ளிப்போவதாக வெளியீட்டுக்கு முந்தைய நாளில் இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்தார்.