விகேபுரம்,டிச.9: நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்காத சூழலில் விகேபுரம் பொதுமக்களே களத்தில் இறங்கி வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் ஆக்கிரமித்துள்ள அமலைசெடிகளை அகற்றினர். தண்ணீர் செல்ல தடை ஏற்படுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று ேநாய் பரவுவது மட்டுமின்றி விஷ ஜந்துகள் பதுங்குவதை தடுக்க பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
பாபநாசம் தலையணையில் இருந்து விவசாயத்திற்கு வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் வழியாக தண்ணீர் விடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கால்வாய் பொதிகையடி, அனவன்குடியிருப்பு, டாணா, விகேபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், மன்னார்கோவில், வாகைகுளம் ஆகிய ஊர்களுக்கு செல்கிறது. மொத்தம் 18 ஆயிரத்து 861 நீளம் கொண்ட இக்கால்வாயின் மூலம் அம்பை தாலுகாவில் 2280 ஏக்கர் விவசாய நிலம் பயன்
பெறுகிறது.
The post விகேபுரத்தில் பொதுமக்களே களத்தில் இறங்கினர் வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் அமலைசெடிகள் அகற்றம் appeared first on Dinakaran.